கலைத்துறையில் இருக்கும் கலைஞர்களுக்கு அங்கீகாரம் மிக அவசியமான ஒன்று. தான் செய்த ஒரு நல்ல பரீட்சார்த்தமான முயற்சிக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போனதாலேயே அதற்கடுத்த முயற்சியில் சரியான ஆர்வம் காட்டாமல் இந்தத் துறையில் தோல்வியடைந்தவர்கள் நிறைய பேர். கலைத்துறையில் கிடைக்கும் அங்கீகாரங்களில் எல்லாவற்றிலும் மேன்மையானது ஜனங்களுடைய பாராட்டு எனும் அங்கீகாரம் மட்டுமே. அதற்காக ஒருவரை ஆஹா ஓஹோ என புகழ வேண்டும் என்கிற தேவையில்லை.அவரது நல்ல பணியை சரியான விதத்தில் ஊக்குவித்தாலே அது அந்த கலைஞருக்கு பெரிய அங்கீகாரம் மற்றும் விருது கிடைக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும்.அந்த வகையில் இளையதளபதியை பாராட்டி அவரின் செயல்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் வரும் கட்டுரைகள் / ஊடக செயல்பாடுகள் மிகவும் குறைவு.அவர் மீது வைக்கப்படும் ஆதாரமற்ற, உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுக்களை மறுத்து அதற்கான ஆதாரங்கள் காட்டி அதனை தெளிவுபடுத்தவே நேரம் போதவில்லை அவரது ரசிகர்களுக்கு. செய்யும் தொழிலே தெய்வம் என இருக்கும் அனைத்து பணியாளர்களும் பாராட்டுக்குரியவர்களே.அந்த வகையில் இளையதளபதியின் professionalism ஆனது ரஜினி,கமல் போன்ற மிகப்பெரும் நடிகர்களால் மட்டுமல்லாது பல முன்னணி இயக்குநர்கள் (சங்கர்,ARM), தயாரிப்பாளர்கள் என பல மூத்த
கலைஞர்களால் பாராட்டப்பட்டு இருக்கிறது. படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வரும் நேரம்தவறாமை போன்ற அவரது இயல்பு சங்கர் போன்ற ஆகச்சிறந்த கலைஞர்களால் கூட பாராட்டப்பெற்றது.கலைஞானி கமல்ஹாசன் ஒரு தொழில்நுட்பக்கலைஞரின் மகனாக திரைப்படத் தொழில் பற்றி நன்றாகப் புரிந்து நடந்து கொள்பவர் என விஜய்யை பாராட்டினார். நிறைய புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஒரு நடிகனாக மட்டுமில்லாமல் பட தயாரிப்பாளருக்கு கூட சம்பள விஷயத்தில் கறார் பேர்வழியாக விஜய் இருந்தது இல்லை. கத்தி படத்தில் கூட தன்னுடைய சம்பளத்தை சில விஷயங்களுக்காக சமரசம் செய்து கொண்டார். புலி படத்துக்காக தொடர்ந்து 200 நாட்கள் எந்த இன்னலையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்துள்ளார் (காட்டில் படப்பிடிப்பு நடந்த போது அவரது மென்மையான அணுகுமுறை, தொழில் மீது அவர் கொண்டிருக்கும் மரியாதை, சிரத்தை & காயங்களைக் கூட பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு தடையின்றி நடைபெற கொடுத்த ஒத்துழைப்பு என நிறைய விஷயங்கள் பாராட்டுதலுக்குரியது என அந்த பட இயக்குனர் சிம்புதேவன் கூட கூறியுள்ளார்). இன்றைய தேதியில் ஒரு படம் தொடங்கி அது வெளியிடும் வரை பல இன்னல்கள்.அதைப் பொறுத்தே பல குடும்பங்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. அந்த வகையில் தன் கடின உழைப்பு மற்றும் தொழில் பக்தியால் பல குடும்பங்கள் வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவும் இளையதளபதி மரியாதைக்கும், பாராட்டுக்கும் உரியவரே...